Thursday, January 1, 2009

படித்ததில் பிடித்தது

அன்றொரு நாள் அம்மாவைக் கேட்டேன்,
"என்ன ஆகும் எனது வாழ்க்கை?"

கலைந்த தலையை காதோரம் ஒதுக்கி -
அம்மா சொன்னாள் அன்று,

உன் போல் நானும் பூச்சுமந்து நின்றதில்
நினைவே மிச்சம் -
வாசலில் போட்ட கோலம்
வழிபோக்கர் மிதிக்கலாச்சு,
கனவுகள் வேண்டாம் பெண்ணே!
நிஜங்களின் நிறங்களை ரசிக்க
நீயேனும் கற்றுக் கொள்க.

-மாலன்

No comments: